தன்னைத்தான் காக்கின் சினங்காக்க [வள்ளுவ கீதை]
Home | Articles

வெகுளாமை என்னும் அதிகாரத்தில் தன்னைத்தான் காக்கின் சினங்காக்க என்ற அற்புதமான குறளின் மூலம், துன்பம் எய்தாமல் வேண்டின், சினம் காக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர். அதே கருத்தை பகவத் கீதையும் மிக அழகாக கூறுகிறது. கீழ்வரும் திருகுறளையும், கீதையும் அறிந்து, சினம் தவிர்த்து இன்புற்று வாழ்வோம். தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் —குறள் பரிமேலழகர்:- தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தான்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். க்ரோதா⁴த்³ ப⁴வதி ஸம்மோஹஹ ஸம்மோஹாத் ஸ்ம்ருதி விப்⁴ரமஹ ஸ்ம்ருதி ப்⁴ரம்ஶாத்³ பு³த்³தி⁴ நாஶோ பு³த்³தி⁴ நாஶாத் ப்ரணஶ்யதி — கீதா.2.63 krodhād bhavati sammohaḥ sammohāt smṛti vibhramaḥ smrti bhraṁśād buddhi nāśo buddhi nāśāt praṇaśyati —bg.2.63 S. Radhakrishnan:- From anger arises bewilderment, from bewilderment loss of memory; and from loss of memory, the destruction of intelligence and from the destruction of intelligence he perishes. bewilderment = a state of mental uncertainty; confused state of mind.

Home | Articles