எண்குணத்தானை போற்றுவோம்
வள்ளுவ கீதை
எண்குணத்தானை, இரு நான்காக பிறிந்தது போல் காட்சி தரும் பரமனை வணங்குவோமாயின் அனைத்து செல்வங்களும் பெற்று வாழ்வது திண்ணம் என்பது ஆன்றோர் வாக்கு.
இயங்காத மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்களை, ஒத்ததாகும் எண்குணத்தான் தாள் வணங்காத் தலை என்பது வள்ளுவன் வாக்கு. கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் உள்ள வள்ளுவ கீதை.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை —9
கண்ணன் கீதையில், பூமி, நீர், தீ, காற்று, வான், மானம், புத்தி, அஹம்காரம் என்று எட்டாக பிரிந்து இயற்கையின் வடிவாக பரம்பொருள் இருப்பதை மிக அழகாக எடுத்துக் கூறியுள்ளான்.
பூ⁴மிர் ஆபோ அநலோ வாயு: க²ம் மநோ பு³த்³தி⁴ர் ஏவ ச
அஹ்ம்ஹ்கார இதி இயம் மே பி⁴ந்நா ப்ரக்ருதிர் அஷ்டதா⁴ —7.4
மேலும், நீரில் ரஸமாகவும் (ருசி); சந்திர, சூரியர்களில் ஒளியாகவும்; வேதங்களில் ஓம்காரமாகவும்; ஆகாயத்தில் ஒளியாகவும்; மனிதர்களில் புருஷனாகவும்; பூமியில் சுகந்தமாகவும்; அக்னியில் தேஜஸாகவும்; அனைத்து உயிரினங்களிலும் ஜீவனாகவும்; தபஸ்விகளிடத்தில் தபஸாகவும்; அனைத்து உயிரனங்களுக்கும் ஆதார வித்தாகவும்; புத்திமான்களில் புத்தியாகவும்; தேஜஸ்விகளிடையே தேஜஸாகவும்; பலவான்களிடத்தை பலமாகவும்; இயற்கைக்கு மாறாகாத ஆசையுமாக இருக்கும் பரம்பொருள் என்று ஞான விஞ்ஞான யோகம் என்ற ஏழாவது அத்யாயத்தில் உள்ள கீழ்வரும் கீதை வாக்கியத்தை அறிந்து இன்புற்றிருப்போம்.
ரஸோ அஹம் அப்ஸு கௌந்தேய
ப்ரபா⁴ அஸ்மி ஶஶி-ஸூர்யயோ:
ப்ரணவஹ ஸர்வவேதே³ஷு
ஶப்³த³ஹ கே² பௌருஷம் ந்ருஷு —7.8
புண்யோ க³ந்த்⁴ஹ ப்ருதி²வ்யாம் ச
தேஜஶ் ச அஸ்மி விபா⁴வஸௌ
ஜீவநம் ஸர்வபூ⁴தேஷு
தபஶ் ச அஸ்மி தபஸ்விஷு —7.9
பீ³ஜம் மாம் ஸர்வபூ⁴தாநம்
வித்³தி⁴ பார்த² ஸநாதநம்
பு³த்³தி⁴ர் பு³த்³தி⁴மதாம் அஸ்மி
தேஜஸ் தேஜஸ்விநாம் அஹம் —7.10
ப³லம் ப³லவதம் ச அஹம்
காமராக³விவர்ஜிதம்
த⁴ர்மாவிருத்³தோ⁴ பூ⁴தேஷு
காமோ அஸ்மி ப⁴ரதர்ஷப⁴ —7.11
பரமார்த்த தர்ஸனம் (ஸ்ரீ பட்டர் அவர்களின் பகவத்கீதை தமிழ் மொழிபெயர்ப்பு)
திரியும் இருகதிரினிடைத்
திகழொளி நான்றிருமறையி
னரிய முதலெழுத்து நான்
ஆடவர் பாலாண்மையு நான்
விரிபுனலிற் சுவையு நான்
மேதினியில் வாசமும் நா
னெரியில் வருவெம்மையு நான்
ஆகாசத்தெழும் ஒலிநான். (சு)
ஆனறவறிவுடையோர்
பாலறிவு நானடங்கினர்பால்
வான்றவநான் வளர்நன்மை
பூண்டார்பால்வண்புகழ்நான்
றோன்றன்மிகுதிறலோர்பாற்காம
முறாத்தொல்வலிநா
னூன்றுபொருளனைத்தினுக்கு
முயிராகியுள்ளேனான். (எ)
இக்கருத்தையே மாணிக்கவாசகர் தனது திருவாசகத்தில்
வான் ஆகி, மண் ஆகி,
வளி ஆகி, ஒளி ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி,
உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
கோன் ஆகி, யான், எனது என்று
அவர்-அவரைக் கூத்தாட்டு-
வான் ஆகி, நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே!
கைவல்ய உபநிஷத்தும் பரம்பொருள் அனைத்துமாகவும், மெய்யாகி இருப்பதை,
ஏதஸ்மாஜ் ஜாயதே ப்ராணோ
மநஹ ஸர்வேந்த்³ரியாணி ச,
க²ம் வாயுர் ஜ்யோதிர் ஆபஶ்ச
ப்ருத்²வீ விஶ்வஸ்ய தா⁴ரிணி —15
யத்பரம் ப்³ரஹ்ம ஸர்வாத்மா
விஶ்வஸ்யாயதநம் மஹத்,
ஸூக்ஷ்மாத் ஸூக்ஷ்மதரம் நித்யம்
தத் தவம் ஏவ த்வம் ஏவ தத்—16
தத் த்வம் ஏவ த்வமேவ தத் என்கிறது உபநிஷத். அப்பர்சுவாமிகள் இக்கருத்தையே மிக அருமையாக பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி என்று தேவார பாடலில் (6.94.1) பாடியுள்ளார்.
இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,
இயமானனாய், எறியும் காற்றும் ஆகி,
அரு நிலைய திங்கள் ஆய், ஞாயிறு ஆகி,
ஆகாசம் ஆய், அட்டமூர்த்தி ஆகி,
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி
நெருநலை ஆய், இன்று ஆகி, நாளை ஆகி,
நிமிர்புன்சடை அடிகள் நின்ற ஆறே!
ஸ்ரீருத்ர பாராயணத்தின் போது (லகுந்யாஸம்),
அக்³நிர்மே வசி ஶ்ரிதஹ — வக்ரு⁴த³யே — வயுர்மே ப்ராணே ஶ்ரிதஹ — ப்ராணோ ஹ்ருத³யே — ஸூர்யோ மே சக்ஷுஷி ஶ்ரிதஹ — சக்ஷுர் ஹ்ருத³யே — சந்த்³ரமா மே மநிஸி ஶ்ரிதஹ — மநோ ஹ்ருத³யே — தி³ஶோமே ஶ்ரோத்ரே ஶ்ரிதஹ — ஶ்ரோத்ரம் ஹ்ருத³யே — ஆபோமே ரேதஸி ஶ்ரிதஹ — ரேதோ ஹ்ருத³யே — ப்ருதி²வீ மே ஸ்ரீரே ஶ்ரிதஹ — ஶரீரம் ஹ்ருத³யே — ஓஷதி⁴வநஸ்பதயோ மே லோமஸு ஶ்ரிதஹ — லோமாநி ஹ்ருத³யே — இந்த்³ரோமே ப³லே ஶ்ரிதஹ — ப³லம் ஹ்ருத³யே — பர்ஜந்யோ மே மூர்த்⁴நி ஶ்ரிதஹ — மூர்தா⁴ ஹ்ருத³யே — ஈஶநோ மே மந்யௌ ஶ்ரிதஹ — மந்யுர் ஹ்ருத³யே — ஆத்மா ம ஆத்மநி ஶ்ரிதஹ — ஆத்மா ஹ்ருத³யே —
என்றும், ஹ்ருத³யம் மயி — அஹம் அம்ருதே — அம்ருதம் ப்³ரஹ்மணி என்று ஒவ்வொரு முறையும் சேர்த்துக்கொண்டு ப்ரார்தனை செய்யும் வேத முறையும் பரமன் எங்கும் பரவியுள்ளான் என்பதை மிக அழகாக கூறுகிறது.