இனியவை கூறலே அறம் [வள்ளுவ கீதை]
Home | Articles

இனிது நோக்கி அகத்தானாம் இனியவை கூறலே அறம் என்பது வள்ளுவன் வாக்கு. கீழ்கண்ட குறள் அறிந்து இன்புற்று வாழ்வோம். முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். பரிமேலழகர்:- முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணேதே அறம். திரு. மு. வரதராசனார்:- முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்.

Home | Articles