பகலென்னும் பண்பு
[வள்ளுவ கீதை]
இன்பத்துள் இன்பம் பயக்கும் பகலென்னும் பண்பு; பகலென்னும் பண்பு - எல்லா உயிர்களிடத்தும் நடுவுநிலமை உண்டாயின் - இன்பத்துள் இன்பம் பயக்கும் - இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினை அடைவர், என்பது வள்ளுவன் வாக்கு. இக்கருத்தை இரண்டு அருமையான குறள்கள் மூலமாக நமக்கு திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார். அந்த இரண்டு குறள்களை பரிமேலழகரின் அழகிய உரையின் துணை கொண்டு செவ்வனே தெளியலாம்.
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
பரிமேலழகர்:- எல்லா உயிர்க்கும் பகல் என்னும் பண்பு இன்மை பாரிக்கும் நோய் - எல்லா உயிர்கட்கும் பிறஉயிர்களோடு கூடாமை என்னும் தீக்குணத்தை வளர்க்கும் குற்றம்; இகல் என்ப - இகல் என்று சொல்லுவர் நூலோர். (மக்களையும் விலங்குகளோடு ஒப்பிப்பது என்பது தோன்ற 'எல்லாஉயிர்க்கும்' என்றும், பகுதிக்குணத்தை இடைநின்றுவிளைத்தலின் 'பகல் என்னும் பண்பு இன்மை' என்றும் கூறினார். நற்குணம் இன்மை அருத்தாபத்தியால் தீகுணமாயிற்று. இதனால்[ன்] இகலது குற்றம் கூறப்பட்டது.)
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்
பரிமேலழகர்:- இகல் என்னும் துன்பத்துள் துன்பம் கெடின் - மாறுபாடு என்று சொல்லப்படுகின்ற துன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க துன்பம் ஒருவனுக்கு இல்லையாயின்; இன்பத்துள் இன்பம் பயக்கும் - அவ்வின்மை அவனுக்கு இன்பங்கள் எல்லாவற்றினும் மிக்க இன்பத்தினைக் கொடுக்கும். (துன்பத்துள் துன்பம் - பலரொடு பொருது வலி தொலைத்தான் யாவர்க்கும் எளியானாயுறுவது. அதனை இடையின்றியே பயத்தலின். 'இகல் என்னும்' என்றார். இன்பத்துள்இன்பம் - யாவரும் நட்பாகலின் எல்லாப் பயனும் எய்தியுறுவது.)
இந்த கருத்தை பகவத் கீதையும் மிக அழகாக எடுத்துறைக்கிறது. பன்னிரெண்டாம் அத்யாயத்தில் (பக்தி யோகம்) பதிமூன்றாவது ஸ்லோகத்தின் மூலமாகவும், அதற்கான ஸ்ரீமத் சங்கராசார்யாரின் பாஷ்யத்தின் மூலமாகவும் அறிந்துகொள்ளாம். மேலும் அந்த ஸ்லோகத்திற்கு ஸர்வபள்ளி. ராதாகிருஷ்ணன் அவர்களின் ஆங்கில உரையும் கண்டு அனுபவிக்கலாம். ஆழ்ந்து நோக்கின் திருக்குறள் வள்ளுவ கீதை என்று தோன்றுகிறது.
adveṣṭā sarvabhūtānāṁ
maitraḥ karuṇa eva ca
nirmamo nirahaṁkāraḥ
sama dubkha sukhaḥ kṣamī — bg.12.13
saṁtuṣṭaḥ satataṁ yogi
yatātmā dṛḍhaniścayaḥ
mayy arpitamano buddhir
yo madbhaktaḥ sa me priyaḥ — bg.12.14
Śaṅkarācārya:- adveṣṭeti — adveṣṭā sarva-bhūtānāṁ na dveṣṭā ātmano duḥkha-hetum-api na kiṁcit dveṣṭi, sarvāṇi bhūta-anyatvena hi paśyati — maitro mitra-bhāvo maitrī mitratayā vartate iti maitraḥ — karuṇa eva ca, karuṇā kṛpā duḥkhiteṣu dayā tadvān karuṇaḥ, sarva-bhūta-abhaya-pradaḥ, saṁnyāsi-ity-arthaḥ — nirmāmo mama-pratyaya-varjitaḥ nirahaṁkāro nirgata-ahaṁ-pratyayaḥ — sama-duḥkha-sukhaḥ same duḥkha-sukhe dveṣa-rāgayor-apravartake yasya sa sama-duḥkha-sukhaḥ — kṣamī kṣamavān ākruṣṭoऽbhihato vā avikriya evāste — 13 —
Śaṅkarācārya:- saṁtuṣṭa iti — saṁtuṣṭaḥ satataṁ nityaṁ deha-sthiti-kāraṇasyaṁ lābheऽlābhe ca utpanna-alaṁ-pratyayaḥ — tathā guṇavallabhe viparyaye ca saṁtuṣṭaḥ — satataṁ yogī samāhita-cittaḥ — yat-ātmā saṁyatasvabhāvaḥ — dṛḍha-niścayo dṛḍhaḥ sthiro niścayoऽdhyavasāyo yasya-ātma-tattva-viṣaye sa dṛḍha-niścayaḥ — mayyarpita-mano-buddhiḥ saṁkalpa-vikalpa-ātmakaṁ manaḥ, adhyavasāya-lakṣṇā buddhiḥ, te mayy-eva-arpite sthāpite yasya saṁnyāsinaḥ sa mayy-arpita-mano-buddhiḥ — ya īdṛśo mad-bhaktaḥ sa me priyaḥ — priyo hi jñāninoऽtyartham-ahaṁ sa ca mama priyaḥ [gī—7—17] iti saptamoऽdhyāye sūcitaṁ tad-iha prapaṁcyate — 14 —
S. Radhakrishan:- He who has no ill will to any being, who is friendly and compassionate, free from egoism, and self-sense, evenminded in pain and pleasure and patient. — 13 —
The Yogi who is ever content, self-controlled: unshakable in determination, with mind and understanding given up to Me—he, My devotee, is dear to Me. — 14 —