Ātma Upatēcam - Namāḻvār
Home | Articles

Divyaprabandam songs of Āḻvārs are Nectar, Amṛtam. These beautiful verses has to be enjoyed. Songs of Śrī.Namāḻvār's Tiruvāymoḻi, ātma upatēcam, 13.1 are a marvel. திவ்யபிரபந்த பாடல்கள் அனுபவிக்க வேண்டியவை என்பது சான்றோர் வாக்கு நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர், நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர், என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர்; என்றும் ஓர் இயல்வொடு நின்ற எம் திடரே. niṉṟaṉar iruntaṉar kiṭantaṉar tirintaṉar, niṉṟilar iruntilar kiṭantilar tirintilar, eṉṟum ōr iyalviṉar eṉa niṉaivu ariyavar; eṉṟum ōr iyalvoṭu niṉṟa em tiṭarē. திட விசும்பு, எரி, வளி, நீர், நிலம் இவைமிசைப் படர் பொருள் முழுவதும் ஆய், அவை அவைதொறும் உடல்மிசை உயிர் எனக் கரந்து, எங்கும் பரந்துளன்: சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே. tiṭa vicumpu, eri, vaḷi, nīr, nilam ivaimicaip paṭar poruḷ muḻuvatum āy, avai avaitoṟum uṭalmicai uyir eṉak karantu, eṅkum parantuḷaṉ: cuṭar miku curutiyuḷ ivai uṇṭa curaṉē. கர விசும்பு, எரி, வளி, நீர், நிலம்: இவைமிசை வரந்நவில், திறல், வலி, அளி, பொறை ஆய்நின்ற பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல் நிரல்-நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே. kara vicumpu, eri, vaḷi, nīr, nilam: ivaimicai varannavil, tiṟal, vali, aḷi, poṟai āyniṉṟa paraṉ aṭimēl kurukūrc caṭakōpaṉ col niral-niṟai āyirattu ivai pattum vīṭē. Beautiful songs of self-realization by Namāḻvār. (Tiruvāymoḻi, 13.9) இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும் எவையும் எவரும் தன்னுளே ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனிமுதல் எம்மான், கண்ண-பிரான், என் அமுதம், சுவையன்: திருவின் மணாளன் என்னுடையச் சூழல் உளானே. ivaiyum avaiyum uvaiyum ivarum avarum uvarum evaiyum evarum taṉṉuḷē ākiyum ākkiyum kākkum avaiyuḷ taṉimutal emmāṉ, kaṇṇa-pirāṉ, eṉ amutam, cuvaiyaṉ: tiruviṉ maṇāḷaṉ eṉṉuṭaiyac cūḻal uḷāṉē. மாயன் என் நெஞ்சின் உள்ளான், மற்றும் எவர்க்கும் அதுவே; காயமும் சீவனும் தானே; காலும் எரியும் அவனே; சேயன், அணியன், எவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்; தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணையானே. māyaṉ eṉ neñciṉ uḷḷāṉ, maṟṟum evarkkum atuvē; kāyamum cīvaṉum tāṉē; kālum eriyum avaṉē; cēyaṉ, aṇiyaṉ, evarkkum cintaikkum kōcaram allaṉ; tūyaṉ tuyakkaṉ mayakkaṉ eṉṉuṭait tōḷiṇaiyāṉē. The same is expressed beautifully by Appar Svāmikaḷ in Tēvāram 6.94.1. piṟar uruvum tam uruvum tāmē āki. [Refer article on Aṣṭmūrti]

Home | Articles