ருத்³ர-வாஸுதே³வ
விஶ்வா பு⁴வநாऽவிவேஶ
தஸ்மை ருத்³ராய நமோ அஸ்து
ஸர்வ பூ⁴த நிவாஸோऽஸி
வாஸுதே³வ நமோऽஸ்து தே
உலகங்கள் அனுத்திலும் கலந்து ஊடுருவி இருக்கின்ற, ஸர்வ பூ⁴தங்களிலும் வஸிக்கின்ற வாஸம் செய்கின்ற சக்தியை ருத்³ராகவும், வாஸுதே³வராகவும் வணங்குகின்றோம். ஸ்ரீருத்³ரத்திலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் உள்ள வரிகள் மிக அழகாக கூறுகின்றன. இக்கருத்தையே கம்பனின் அழகிய பாடல் குறிக்கிறது.
உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெருத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே
..................................................... — கம்பன்
அனைத்து உலகங்களிலும், அனைத்து ஜீவராசிகளிலும் இருப்பது ஒரே சக்தி என்ற அறிவு, ஞானம் ஏற்படும் போது நமக்கு அனத்து சௌபாகயங்களும் சித்திக்கின்றன என்பதை சமகத்தில் உள்ள மூன்றாவது அனுவாகம் மிக அழகாக எடுத்து கூறுகிறது.
ஶம் ச மே மயஶ்ச மே ப்ரியம் ச மே—அநுகாமஶ்ச மே காமஶ்ச மே ஸௌமநஸஶ்ச மே ப⁴த்³ரம் ச மே ஶ்ரேயஶ்ச மே வஸ்யஶ்ச மே யஶஶ்ச மே ப⁴க³ஶ்ச மே த்³ரவிணம் ச மே யந்தா ச மே த⁴ர்தா ச மே க்ஷேமஶ்ச மே த்ரு⁴திஶ்ச மே விஶ்வம் ச மே மஹஶ்ச மே ஸம்விச்ச மே ஞாத்ரம் ச மே ஸூஶ்ச மே ப்ரஸூஶ்ச மே ஸீரம் ச மே லயஶ்ச ம ருதம் ச மே—அம்ருதம் ச மே—அயக்ஷ்மம் ச மே—அநாமயச்ச மே ஜீவாதுஶ்ச மே தீ³ர்கா⁴யுத்வம் ச மே—அநமித்ரம் ச மே—அப⁴யம் ச மே ஸுக³ம் ச மே ஶயநம் ச மே ஸூஷா ச மே ஸுதி³நம் ச மே —3
(ஶம்) இவுலக இன்பமும் (மய:) மேலுலகா இன்பமும் (ப்ரியம்) பிரியமும் (அனுகாம:) அதனால் ஏற்படும் ஆசையும் (காம:) அவ்வாசையின் அனுபவுமும் (ஸொமனஸ:) நன்மை படைத்த / மனதிற்கினிய உற்றாரும், (ப⁴த்³ரம்) மங்களமும் (ஶ்ரேய:) உயர் நலமும் (வஸ்ய:) நல்ல வாசஸ்தானமும் (யஶ:) புகழும் (ப⁴க³:) சௌபாக்யமும் (த்³ரவிணம்) செல்வமும், (யந்தா) வழிகாட்டும் ஆசார்யனும், (த⁴ர்தா) தந்தை போன்று தாங்குபவனும், (க்ஷேம:) உடைமையின் ரக்ஷணமும், (த்ரு⁴தி:) தைரியமும், (விஶ்வம்) எல்லோருடைய அனுகூலமும், (மஹ:) வெகுமானமும் (ஸம்வித்) வேத சாஸ்தர ஞானமும் (ஜ்ஞாத்ரம்) போதனா சக்தியும் (ஸூ:) மக்களை ஏவுந் திறைமையும் (ப்ரஸூ:) பணியாட்களை நடத்துந்திறைமையும், (ஸீரம்) மேழிச் செல்வமும், (லய:) இடையூறுகளின் ஒழிவும், (ருதம்) யாகம் முதலிய நற் கருமமும், (அம்ருதம்) அதன் புண்ணிய பலனும், (அயக்ஷ்மம்) நீடித்த க்ஷயம் முதலிய நோயின்மையும், (அனாமய:) குறுகிய ஜ்வரம் முதலிய நோயின்மையும், (ஜீவாது:) நோயாற்ற வாழ்விற்குரிய மருந்தும், (தீ³ர்கா⁴யுத்வம்) நீண்ட ஆயுளும், (அனமித்ரம்) சிநேகிதரல்லாதாரில்லாமையும், (அப⁴யம்) பயமின்மையும், (ஸுகம்) நன்னடக்கையும், (ஶயநம்) நல்ல ஶயநமும், (ஸூஷா) பகவத்ஸ்மரணையுடன் கூடிய விடியற்காலையும, (ஸுதி³நம்) யக்ஞம் தானம் அத்தியயனம் முதலிய பாவனமான காரியங்களுடன் கூடிய பகற்பொழுதும், ஸ்ரீ ருத்திரனை ஆராதிக்கும் எனக்குச் சித்திப்பனவாம் / சித்திக்கின்றனவாம். —ஸ்ரீ அண்ணா